1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (23:22 IST)

நடிகர் சூர்யாவை சீண்டிய ஹெச்.ராஜா

நடிகர் சூர்யா வரிக்கான வட்டியை ரத்து செய்யவேண்டுமென நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதுகுறித்த ஹேஸ்டேக் இன்று இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்நிலையில், தற்போது பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிடர் பக்கத்தில் இது ஒரு தரமான தீர்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.

வருமான வரி மீதான வட்டியைச் செலுத்தத் தடை கோரி நடிகர் சூர்யா நீதிமன்றத்தில் வழங்குத் தொடந்த நிலையில்,  வருமான வரி மதிப்பீட்டிற்கு சரியானபடி அவர் ஒத்துழைக்கவில்லை எனவும் இதற்கான வட்டி விலக்கிற்கு அவருக்கு உரிமையில்லை எனவும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் பதிலளித்தது.

இதனால் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சூர்யா மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய பாஜக அரசின் தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் அகரம் என்ற கல்வி அமைப்பை நடத்தி வரும் சூர்யா தனது எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.