செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 11 நவம்பர் 2018 (16:42 IST)

ஜோதிகாவின் 'ஜிமிக்கி கம்மல்' டான்ஸ்- ஆர்வம் காட்டும் ரசிகர்கள்

16ம்  தேதி வெளியாகவுள்ள காற்றின் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’ஜிமிக்கி கம்மல்’ ஜோதிகா வெர்ஷன் நாளை மாலை வெளியாக உள்ளது.

வித்யாபாலன் கதையின் நாயகியாக நடித்த 'துமாரி சுலு' என்ற திரைப்படம் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வித்யாபாலன் நடித்த கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.  இயக்குநர் ராதா மோகன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராகவும் நடிகர் சிம்பு ஹெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார்கள்.  காற்றின் மொழி படம் வருகிற 16-ம் தேதி  வெளியாகவுள்ளது. 

'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற மலையாளப்படத்தின் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு  ஷெரல் மற்றும் குழுவினர் நடனம் ஆடியதால், அந்த பாடல் கேரளா மற்றும் தமிழகத்தில் வைரலானது.  இந்த பாடல்  காற்றின் மொழி படத்திலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பாடலுக்கு ஜோதிகா நடனமாடுவது போல படங்கள் வெளியாகியுள்ளது. அதில், 'இந்த பாடல்  நாளை (12-ம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது. ’ஜிமிக்கி கம்மல்’ ஜோதிகா வெர்ஷனை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டாக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள்.