ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (07:59 IST)

சூர்யா பட்ட கடனை அடைக்கும் ஜோதிகா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸாகி, படுதோல்வி அடைந்தது. இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் தயாரிப்பாளர் சூர்யாவின் நெருங்கிய உறவினர் என்பதால் அவரால் சூர்யாவுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் 'என்.ஜி.கே' படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.
 
இந்த நிலையில் நாளை ரிலீஸ் ஆகும் ஜோதிகாவின் 'ராட்சசி' படத்தை 'என்.ஜி.கே' படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கு இலவசமாக சூர்யா கொடுத்துள்ளாராம். 'என்.ஜி.கே' நஷ்டம் போக மீதி இருந்தால் 'ராட்சசி' படத்திற்கான தொகையை கொடுத்தால் போதும்' என்று வாய்மொழியாக உறுதி தரப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனையடுத்தே விநியோகிஸ்தர்கள் சமாதானமாகிவிட்டதாக கூறப்படுகிறது
 
மொத்தத்தில் கணவர் சூர்யா பட்ட கடனை அடைக்க மனைவி ஜோதிகா உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராட்சசி' திரைப்படம் சின்ன பட்ஜெட் படம் என்பதால் இந்த படம் ஓரளவு லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாததும் ஒரு பிளஸ் பாயிண்ட். அதேபோல் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் சூர்யாவின் 'காப்பான்' திரைப்படமும், 'என்.ஜி.கே' வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கு கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது