1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (10:17 IST)

மேக்சிமம் கடன் மோசடி தமிழகத்தில்... கணக்கு காட்டும் நிர்மலா சீதாராமன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் பெற்று மோசடி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY) சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தக் கடன் திட்டம் அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 
 
கடந்த 2015 - 2016 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் மக்களவையில் முத்ரா கடன் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். 
நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாவது, முத்ரா கடன் திட்டம் துவங்கப்பட்டு கடந்த ஜூன் 21 ஆம் தேதி வரை ரூ.19 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,313 மோசடிகளும் நடந்துள்ளது. 
 
முத்ரா கடன் திட்டதில் வழங்கப்பட்ட கடனின் தமிழஜ்கத்தில் அதிகபட்சமாக 344 மோசடிகள் நடந்துள்ளன. இதை தொடர்ந்து சண்டிகரின் 275 மோசடிகளும், ஆந்திராவில் 241 மோசடிகளும் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.