ஆர் ஆர் ஆர் படத்தின் அடுத்த ப்ரோமோ – பில்ட் அப் ரொம்ப ஓவரா இருக்கே!
ராஜமௌலி இயக்கும் அடுத்த படமான ஆர் ஆர் ஆர் படத்தின் ஜூனியர் என் டி ஆர் கதாபாத்திர ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.
இந்த படத்தின் ராம் சரணின் கதாபாத்திர அறிமுகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அதையடுத்து இப்போது ஜூனியர் என் டி ஆர் கதாபாத்திரமான பீம் அறிமுக ப்ரோமோ வெளியாகியுள்ளது. ராம் சரண் கதாபாத்திரத்துக்கு பில்ட் அப் கொடுத்தது போலவே இந்த கதாபாத்திரத்துக்கும் பில்ட் அப் கொடுத்துள்ளார் ராஜமௌலி.