1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:32 IST)

ஜல்லிக்கட்டு போராட்ட புகைப்படத்தை பதிவிட்டு வாங்கிக்கட்டிய ஜூலி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி  அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார்.  பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல் , விளம்பர படங்களில் நடித்தல் என கவுரமாக இருந்து வந்தாலும் இவரை கிண்டல் செய்யவே இன்னும் கூட்டம் கூட்டமாக ஆட்கள் இருக்கின்றனர். 
 
அடிக்கடி எதையாவது பதிவிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டி கொள்வதையே வேலையாக வைத்துள்ள ஜூலி பொங்கல் இனத்தை முன்னிட்டும்  தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டதின் நியாபகமாகவும் அந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்
 
இந்த புகைப்படத்தை கண்டு சும்மா இருப்பார்களா நம் ஆட்கள்....தமிழகமே உன்னை பார்த்து ஏமார்ந்த அந்த நாள் இன்று என்று கூறியும் ஆக்க்ஷன் ஹீரோயினாக வந்து காமெடி பீசா போய்ட்டீயேம்மா என ஆளாளுக்கு கலாய்த்து வருகின்றனர்.