1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (16:39 IST)

விஜய் ஸ்டைலில் மேடையில் தத்துவமாக பேசிய ஜூலி!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்  சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. மூன்றாவது சீசனே முடியப்போகிறது ஆனால்,  இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலை படாமல் விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார் ஜூலி. அவர்  உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரண கலாய்  கலாய்க்கிறார்கள். மேலும் அவர் எந்த பொய்த்து நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஓவியா...ஓவியான்னு கூச்சலிட்டே ஜூலியை வெறுப்பேற்றி வருகின்றனர். 
 
அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜூலி, மேடையில் விஜய் ஸ்டைலில் தத்துவங்களாக பேசி அடுக்கிக்கொண்டே சென்றார். உடனே அங்கிருந்தவர்கள் குறுக்கிட்டு   ஓவியா...ஓவியா என கூச்சலிட்டனர். பின்னர் ஜூலி, கூட்டமா கத்துறது பெரிய விஷயமில்லை ஒரு ஆள் தனியா  நின்னு பேசுறது தான் தில்லு ...நான் ஒன்றும் உங்களுக்கு சோறு போட வில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை. என்று மிகவும் கோபத்துடன் தத்துவங்களாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.