புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (19:47 IST)

ஜூலி, ஐஸ்வர்யா தத்தா உள்பட 5 நாயகிகள் நடிக்கும் படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சினிமா உலகில் வாய்ப்புகள் பெற்று புகழ் பெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் ஜூலியும், பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா தத்தாவும் பார்வையாளர்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்தனர். எனவே இவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இருவரும் வெளியே வந்தவுடன் திரை உலகில் அதிக வாய்ப்புகளை பெற்று பிசியாக உள்ளனர் 
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஜூலி ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். மொத்தம் 5 கதாநாயகிகள் நடிக்கும் இந்த படம் ஒரு பரபரப்பான பப்ஜி கேம் குறித்த கதையம்சம் கொண்டது. இந்த படத்திற்கு 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தத்தா, ஜூலி ஆகியோர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் இந்த படத்தில் துப்பறிவாளர் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது 
 
இந்தத் திரைப்படத்தை விஜய்ஸ்ரீ என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சாருஹாசன் நடித்த 'தாதா87' மற்றும் ஹம்சவர்தன் நடித்த 'பிட்ரு' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து இயக்குனர் விஜய்ஸ்ரீ கூறியதாவது: பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அந்த பரிசு என்ன? இந்த கேம் காரணமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படத்தில் திரையில நடிக்காமல்  ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை  நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.