1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (15:39 IST)

ஜூலிக்கு ஒருவித மனநோய்; ஓங்கி ஒரு அறை விடனும்: கழுவி ஊற்றும் நடிகர்!

ஜூலிக்கு ஒருவித மனநோய்; ஓங்கி ஒரு அறை விடனும்: கழுவி ஊற்றும் நடிகர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண பெண்ணாக கலந்து கொண்ட ஜல்லிக்காட்டு புகழ் ஜூலிக்கு தொடக்கத்தில் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. நாளாக ஆக அவருக்கு ஆதரவு குறைந்தது மட்டுமல்லாமல் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.


 
 
ஜூலிக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வர காரணம் அவர் நடந்து கொள்ளும் விதம் தான். பொய் கூறுவது, டிராமா போடுவது என பல குற்றச்சாட்டுகள் ஜூலி மீது உள்ளது. முக்கியமாக தனக்கு ஆறுதல் சொன்ன ஓவியாவுக்கு எதிராக ஜூலி பொய் கூறி ஆடிய நாடகம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை அவருக்கு பெற்றுத்தந்தது.
 
சமூக வலைதளங்களில் ஜூலிக்கு எதிராக பல மீம்ஸ்கள் வருகின்றன. பல பிரபலங்களும் ஜூலிக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் எஸ்.வி.சேகரும் ஜூலியை மனநோயாளி என விமர்சித்துள்ளார்.
 
ஜூலி குறித்து அவர் கூறியபோது, 10 ரூபாய் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் பெண் தான் அந்த ஜூலி. சாதாரணமாக ஃபிளாட்டாக கீழே விழுந்த ஜூலி, கபடி விளையாட்டில் எல்லாம் கலந்து கொண்டு வந்த பின்னர் தன்னை யாரும் கவனிக்காததால் திடீரென டிராமா போட்டுவிட்டார்.
 
இது ஒருவகையான மனநோய். அதாவது யாரும் கவனிக்காவிட்டால் சாமி வந்தது போல சிலர் ஆடுவார்கள். அது அவர்களுக்கே தெரியாது. ஓங்கி ஒரு அறை விட்டா சரி ஆயிடும். அதே போல ஜூலி டிராமா செய்த போது அங்கு யாராவது ஓங்கி ஒரு அறை விட்டிருந்தால் அந்த டிராமா நடந்துருக்காது என கூறினார்.