1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (21:25 IST)

அம்மனாக மாறிய ஜூலி

பிக்பாஸ் புகழ் ஜூலி அம்மன் தாயி என்ற படத்தில் அம்மனாக நடித்து வருகிறார்
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போலி என்ற  பெயர் பெற்றார். தற்போது விளம்பரம், தொலைக்காட்சி, பட வாய்ப்பு என பிஸியாக உள்ளார். மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தாலும் தற்போது  ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
 
இவர் தற்போது நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார். மேலும், அம்மன் தாயி என்ற படத்தில் அம்மனாக நடித்து வருகிறார்.
 
இந்த படத்தில் நடிப்பதற்காக ஜூலி விரதம் இருந்து அலகாரத்திலேயே நடித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின் போது ஓட்டலில் தங்காமல் கோவிலிலேயே தங்கியுள்ளார். இப்படம் வரும் ஆடி மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.