வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 13 மே 2018 (12:10 IST)

கமல் கட்சியில் சேரப்போகும் ஜூலி

பிரபல தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போலி என்ற  பெயர் பெற்றார். தற்போது விளம்பரம், தொலைக்காட்சி, பட வாய்ப்பு என பிஸியாக உள்ளார். மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தாலும் தற்போது  ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
 
சமீபத்தில் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?, கமல் ஆட்சியை பிடிப்பாரா? மாட்டாரா?, ஆர்.ஜே. பாலாஜி  அரசியலில் என்ன செய்ய போகிறார்? அப்பா முடியலடா சாமி. அப்போ நம்ம மக்களுக்கு யார் நல்லது பண்ண போகிறார்கள்? நானும் துவங்க போகிறேன் ஒரு கட்சி. விரைவில் அறிவிக்கப்போகிறேன் காத்திருங்கள். ஒன்று சேர்ந்து வெல்வோம் என்று பேசியிருந்தார்.
ஜூலிக்கு அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால் தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார் என்றும் கமல் கட்சியில் சேர முயற்சிக்கிறார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.