வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (07:30 IST)

பதவியை திடீரென ராஜினாமா செய்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.. என்ன காரணம்?

jp nadda
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரிடம் வழங்கி உள்ளதாகவும் அதை அவரும் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
 ராஜ்ய சபா தேர்தலில் குஜராத் மாநிலத்திலிருந்து போட்டியின்றி ஜேபி நட்டா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜேபி நட்டா பதவி காலம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் தாமாகவே அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்திருப்பதால் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva