செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:03 IST)

முதல் முறையாக ஜகமே தந்திரம் செய்யும் சாதனை… தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் ரிலீஸாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இப்போது தனுஷ் ஹாலிவுட் வரை சென்றுள்ள நிலையில் இந்த படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிட உள்ளதாம் நெட்பிளிக்ஸ். அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோஸும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.