1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (14:49 IST)

ஏன் ஓட்டு போடவில்லை.. பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா விளக்கம்..!

JOTHIKA
நடிகை ஜோதிகா நடித்த ஸ்ரீகாந்த் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏன் ஓட்டு போடவில்லை என்பதற்கு ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார். 
 
ஜோதிகா நடித்த சைத்தான் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 200 கோடி வசூல் செய்த நிலையில் தற்போது அவர் ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டில் தயாராகிய இந்த படம் தமிழகத்திலும் வெளீயாக இருக்கும் நிலையில் சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
 
அப்போது தேர்தலில் ஏன் ஓட்டு போடவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது ஒவ்வொரு தேர்தலிலும் சரியாக ஓட்டு போட்டு விடுவேன் என்றும் ஆனால் இந்த தேர்தலின் போது எதிர்பாராத வகையில் ஊரில் இல்லை என்றும் வெளிநாட்டில் இருந்ததால் ஓட்டு போட முடியவில்லை என்றும் தெரிவித்தார். 
 
மேலும் தான் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் குழந்தைகளை கவனிக்கவும் படப்பிடிப்பில் கவனம் கலந்து கொள்ளவும் தனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் அதுமட்டுமின்றி எந்த கட்சியும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறினார். 
 
மேலும் எல்லோரும் உடல் நலத்தை பிட்னஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உடல் நலத்தை பிட்னஸ் ஆக வைத்துக் கொள்வதற்கு என்று தினசரி சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
 
Edited by Mahendran