சிவாஜி பட பாடலில் ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில்

Last Modified திங்கள், 15 ஜூலை 2019 (12:16 IST)
சிவாஜி கணேசன் நடித்த சொர்க்கம் என்ற படத்தில் பொன்மகள் வந்தாள் என்ற என்று தொடங்கும் ஒரு பாடல் இருக்கும். அந்த பாடலில் உள்ள வரிகள் ஜோதிகாவின் அடுத்த படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளது. அம் ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் 'பொன்மகள் வந்தாள் என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது ஜாக்பாட் மற்றும் கார்த்தியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே


இந்நிலையில் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு பொன்மகள் வந்தாள் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை ஜெஜெ ஃபெட்ரிக் இயக்க உள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :