1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (12:35 IST)

தனுஷ்-சேகர் கம்முலா படத்தில் பாலிவுட் நடிகர்.. சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா  இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளியானது என்பதை பார்த்தோம். 
 
இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் இதில் மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜிம்சர்ப் என்பவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது தென்னிந்திய மொழியிலும் நடிக்க வந்திருப்பது  இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran