தனுஷ்கோடி - இலங்கை இடையே கடல் பாலம்: மத்திய அரசின் மாபெரும் திட்டம்..!
சமீபத்தில் மும்பையில் மாபெரும் பாலம் திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடி மற்றும் இலங்கையில் உள்ள தலைமன்னார் இடையே பாலம் அமைக்க மத்திய அரசு மாபெரும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் இருக்கும் தலை மன்னாரை இணைக்கும் விதமாக அமைக்கப்படும் கடல் பாலம் 23 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என்றும், இந்த பாலம் அமைக்க சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம், தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையேயான போக்குவரத்து வசதி மேம்படும் என்றும், இந்த பாலம் பொருளாதார மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாலம் அமைப்பதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran