செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (14:46 IST)

விஜய்க்கு அடுத்த கதை ரெடி செய்த ஜில்லா நேசன்… பிரபல இயக்குனரின் வைரல் ட்வீட்!

விஜய், மோகன் லால் நடித்த ஜில்லா படத்தை நேசன் இயக்கி இருந்தார். இந்த படம் 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அஜித்தின் வீரம் படத்தோடு இந்த படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படத்தில் மோகன்லால் மற்றும் விஜய் இருந்தும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இதன் காரணமாக ஜில்லா படத்தின் இயக்குனர் நேசனுக்கு அடுத்த 9 ஆண்டுகளாகப் படம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது பாணா காத்தாடி உள்ளிட்ட படங்களின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நேசனோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான். விஜய்க்காக நேசன் எழுதியுள்ள புதிய திரைக்கதையைக் கேட்டேன். மிகச்சிறப்பு. தளபதி விஜய், அதைக் கேட்டு அந்த படம் உருவாகு என நம்புகிறேன். அது நடந்தால் தளபதி ரசிகர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.