'ஜிவி' வெற்றியின் அடுத்த படத்தின் அறிவிப்பு!

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (19:07 IST)
ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' மற்றும் கோபிநாத் இயக்கிய 'ஜிவி' ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் வெற்றியின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
கடந்த ஜூன் மாதம் வெளிவந்த 'ஜிவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியின் நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது. இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே அவர் மூன்று பிரபல இயக்குனர்களின் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ஷ்யாம் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க வெற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. மேக்னம் பிக்சர்ஸ் மற்றும் அஷ்வமேதா புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஃபாசில் கலீத் ஒளிப்பதிவும் பிரவீன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்.

இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படமும் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :