செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 டிசம்பர் 2017 (16:05 IST)

பாலிவுட்டில் ரீமேக்காகும் கார்த்திக் சுப்புராஜின் படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படம் தற்போது பாலிவுட்டில் ரிமெக் செய்யப்பட உள்ளது.

 
கார்த்திக் சுப்புரா இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
 
இந்நிலையில் இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஜிகர்தண்டாவின் இந்தி ரீமேக்கை அஜய் தேவ்கான் தயாரிக்கிறார். பர்கான் அக்தர் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார்.
 
இந்த படத்தை பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றது போல் கதையில் மாற்றத்தை செய்துள்ளார்களாம். மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தை பின்புலமாக வைத்து கதை அமைக்கப்படுகிறதாம்.