1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2017 (17:43 IST)

நயன்தாரா பிறந்தநாளை கொண்டாட பறந்து வந்த பாலிவுட் இயக்குநர்

நயன்தாரா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீரென சென்னை வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.


 
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதனால் நயன்தாராவுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
 
இந்நிலையில் நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அறம் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்து மழை குவிந்தது. இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, இமைக்கா நொடிகள் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீரென சென்னை வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நயன்தாரா பிறந்தநாளுக்காக வடமாநிலத்தில் அனுராக் பறந்து வந்தது கோலிவுட்டில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது.