1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (11:47 IST)

'பையா 2’ படத்தில் ஜான்வி கபூர்? போனிகபூரின் டுவிட்..!

Jhanvi
லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் பையா 2 என்ற படத்தில் ஆர்யா மற்றும் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக ஒரு சிலர் வதந்தி பரப்பிய நிலையில் இந்த வதந்திக்கு போனி கபூர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
 
திரை உலகில் வதந்தியை பரப்புவதற்கே என்ற ஒரு சிலர் இருக்கின்றனர் என்பதும் யூடியூப் மூலம் பல வதந்திகளை தொடர்ச்சியாக பரப்பவதையே முழு நேர தொழிலாக சிலர் கையாண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் சமீபத்தில் கிளம்பிய வதந்தி ’பையா 2’ என்ற படத்தை லிங்குசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் பரப்பப்பட்டது. 
 
இந்த நிலையில் போனிக்கு ஒவ்வொரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜான்விகபூர் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் அவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் முழுக்க முழுக்க பொய்யான வதந்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பையா 2 படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva