வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:52 IST)

அன்பு பொங்க ஆசை பொங்க.. குடும்பத்தோடு பொங்கல் வாழ்த்து சொன்ன ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம்ரவியின் பொங்கல் வாழ்த்து!
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. பெண்கள் விரும்பும் மேன்லியான தோற்றத்தில் இருப்பதால் அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
இந்த தம்பதிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதிவில்,"அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள். என பதிவிட்டுள்ளார்.