1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (07:11 IST)

ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஜெயம் ரவி நடிக்கும் 33 வது திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. அங்கு ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் கிருத்திகா உதயநிதி படமாக்கியுள்ளார்.