படம் ஓடனாலும் மருமகனுக்கு காஸ்ட்லியான பரிசை வாங்கிக் கொடுத்த மாமியார்- ஜெயம் ரவி ஹேப்பி அண்ணாச்சி!
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான சைரன் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துகளையே பெற்றது.
இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனாலும் மருமகனுக்காக தற்போது ஒன்றரை கோடி மதிப்பிலான காஸ்ட்லியான கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம். தொடர்ந்து ஜெயம் ரவி மாமியார் தயாரிப்பில் படங்களில் நடித்து வருவதால் சைரன் படம் தோல்வி அடைந்தாலும் அவர் மனம் நோகக் கூடாது என இந்த பரிசைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.