வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (14:33 IST)

ஜெயம் ரவியின் பிரதர் பட அப்டேட்டைக் கொடுத்த படக்குழு!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’ஜேஆர் 30’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த படத்துக்கு பிரதர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த போஸ்டர் ஒரு கொரியன் படத்தின் போஸ்டரின் அட்டைக்காப்பி என விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்த நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை ஜி நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் இடம்பெறும் ஒரு சிறிய இசைத் துணுக்கு வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸாகும் என சொலல்ப்படுகிறது.