வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (08:34 IST)

உருவ கேலி நகைச்சுவைக் காட்சிகளுக்காக வருந்துகிறேன்… இயக்குனர் ராஜேஷ் மனம் திறப்பு!

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை.

ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் தீபாவளிக்கு அவர் இயக்கத்தில் ரிலீஸான பிரதர் திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் அவரின் முந்தைய படங்களில் இருந்த குடிக் கொண்டாட்ட காட்சிகள், உருவ கேலி காட்சிகள் ஆகியவை இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜேஷ் “என் முந்தைய படங்களில் இருந்த உருவ கேலி காட்சிகள் மற்றும் மதங்களைப் பற்றிய நக்கல் காட்சிகளுக்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் ஆரோக்யமான நகைச்சுவைக் காட்சிகள் என் படத்தில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.