வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (11:00 IST)

தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி அளித்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 100 சதவீதம் இருக்கை அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் மற்றும் ஈஸவரன் ஆகிய படங்கள் ரிலிஸாவதாலும், திரையரங்குகளுக்கு மீண்டும் கூட்டத்தை வரவைக்கும் பொருட்டும் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர் தமிழ் திரையுலகினர்.  இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த அனுமதி விதிமீறல் என்று கூறியுள்ள மத்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் அந்த அனுமதி திரும்பப் பெறப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து இப்போது தமிழகத்தில் ஏன் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். அதில் ‘தமிழகத்தில் கொரோனா மற்றும் உருமாறிய கரோனா இரண்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த அடிப்படையில் தான் 100% திரையரங்கம் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்குகள் மருத்துவர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும். இதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.