தமிழ்நாட்டில் ஜவான் ப்ரமோஷன்.. ஷாருக் கான் போடும் திட்டம்!
ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பேன் இந்தியன் ரிலீஸாக நான்கு மொழிகளில் ரிலீஸாகிறது.
தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் இயக்குனர் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கோகுலம் பிலிம்ஸ் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் படங்களிலேயே அதிக தொகைக்கு தமிழகத்தில் விற்கப்பட்ட படமாக ஜவான் அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கும் விதமாக ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக விஜய் சேதுபதியை வைத்து ஒரு ப்ரோமோ ஷூட்டையும் சமீபத்தில் படக்குழு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.