ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 மே 2023 (08:57 IST)

ஜப்பான் திரைப்பட விழாவில் விஜய்க்கு விருது! – மேலும் விவரங்கள்..!

ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விழாவில் பல தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட நிலையில் நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பல விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான முக்கியமான தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன்பின்னர் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாஸ்டர் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவி படத்திற்காக சிறந்த நடிகை விருதை கங்கனா ரனாவத் பெற்றார். சிறந்த திரைப்படமாக சார்பட்டா பரம்பரை, சிறந்த இயக்குனராக பா.ரஞ்சித் விருது பெறுகின்றனர்.

சிறந்த இசையமைப்பாளராக மாநாடு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா விருது பெற்றார். சிறந்த துணை நடிகராக மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் நடித்ததற்காக தேர்வு செய்யபட்டார், சிறந்த திரைக்கதைக்கான விருது மாநாடு படத்திற்காக வெங்கட் பிரபு பெறுகிறார்.

Edit by Prasanth.K