1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (11:57 IST)

தெலுங்கில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்…. அதுவும் உச்ச நட்சத்திரத்துக்கு ஜோடியாக!

மறைந்த சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிபபளரான கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.