திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (16:29 IST)

நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பார்த்துவிட்டு ஒருவரை மட்டும் பாராட்டிய மகேஷ் பாபு!

நடிகர் மகேஷ் பாபு எஸ் ஜே சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தைப் பார்த்துவிட்டு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை வெகுவாக புகழ்ந்துள்ளாராம்.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மார்ச் மாதம் 5 ஆம் தேதி அந்த படத்தை ரிலீஸ் செய்யும் வேளைகளில் படக்குழு இறங்கியுள்ளது.

படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இப்போது கதாநாயகன் எஸ் ஜே சூர்யா கலந்துகொண்டு வருகிறார். அப்போது அவர் இந்த படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு யுவனின் பின்னணி இசையை வெகுவாகப் பாராட்டியதாகக் கூறியுள்ளார்.