வியாழன், 10 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (18:22 IST)

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் ஜனசேனா கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என பவன் கல்யாண் அறிவித்துள்ளார், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட துறையின் முன்னணி நடன இயக்குனரான ஜானி மாஸ்டருக்கு எதிராக, ஒரு இளம்பெண் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
 
ஜானி மாஸ்டர் கடந்த ஜனவரி மாதம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்தார். இப்போது, அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வந்துள்ளதால், கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகும்படி ஆந்திர மாநில துணைமுதல்வர் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இது ஆந்திரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜானி மாஸ்டருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்புணர்வு), பிரிவு 506 (அச்சுறுத்தல்), மற்றும் பிரிவு 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
 
Edited by Siva