1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:59 IST)

உலகம் முழுவதும் வெளியானது அவதார் 2: டுவிட்டர் விமர்சனம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பரவசமாகி டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
மிகச் சிறந்த விஷுவல் எஃபக்ட் என்று மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை என்றும் ஒரு பயனாளி தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பயனாளி அவதார் படத்தை விட இரண்டு மடங்கு ஆச்சரியமும் அதிசயமும் அவதார் 2 உள்ளது என்றும் இதில் உள்ள விஷுவல் எபெக்ட் மிகச் சிறந்த விருந்து என்றும் தெரிவித்துள்ளார் 
 
உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படம் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதை அடுத்து மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva