திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 ஜனவரி 2025 (14:50 IST)

ஷகீப் அல் ஹசனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்… பின்னணி என்ன?

வங்கதேசத்தை சேர்ந்த ஆல் ரவுனடரான ஷகிப் அல் ஹசன் அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த அணிக்காக ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

சமீபத்தில் அவர் டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சிகள் நடந்து ஆளும் கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஷகீப் அல் ஹசன் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அதனால் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மீது செக் மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான விசாரணை நடந்து வந்தது. இது சம்மந்தமாக அவரை நேற்று ஆஜராக சொல்லி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரைக் கைது செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.