திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (10:26 IST)

டிசம்பரில் இரண்டு படங்களை இறக்கும் ஜி வி பிரகாஷ்!

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகர்களில் ஒருவர் ஜி வி பிரகாஷ்குமாரும் ஒருவர்.

ஜி வி பிரகாஷ் குமார் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும்போதே கதாநாயகனாக நடிக்கும் முடிவை எடுத்தார்.  அதிலும் சில தடுமாற்றங்களுக்குப் பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இப்போது அவர் கைவசம் 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அதில் பேச்சிலர் மற்றும் ஜெயில் ஆகிய இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே அடுத்த மாதத்தில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வார இடைவெளியில் முதலில் பேச்சிலர் திரைப்படமும், அடுத்து ஜெயில் படமும் ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.