திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (18:15 IST)

ஜிவி பிரகாஷின் ‘பேச்சிலர்’ ரிலீஸ் தேதி இதுவா?

ஜிவி பிரகாஷ் நடித்த ஜெயில் என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் யுஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் ‘பேச்சிலர்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஜிவி பிரகாஷ் நடித்து கிடப்பில் இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது