1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:32 IST)

’ஜெயிலர்’ படத்தில் தமன்னாவின் ஜோடி இந்த பிரபல நடிகரா?

tamannah
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெய் இணைய இருப்பதாகவும், இவருக்கு ஜோடியாகத்தான் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.