டுவிட்டரில் பிளான் போடும் ஜெய், ஆர்யா


Abimukatheesh| Last Updated: வியாழன், 15 டிசம்பர் 2016 (18:46 IST)
டுவிட்டரில் ஆர்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெய், ‘எப்போ ராஜா ராணி-2 தொடங்கலாம்?’ என்று கேட்டார். அதற்கு ஆர்யா, சென்னை 600028-2 போல விரைவில் என்று பதிலுக்கு டுவிட் செய்துள்ளார்.

 

 
தமிழ் நடிகர்களில் டுவிட்டரில் பிசியாக வலம் வருபவர் ஆர்யா. இவரது பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவித்து ஏராளமானோர் டுவிட் செய்தனர். அதில் ஜெய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, ராஜா ராணி-2 எப்போ தொடங்கலாம்? என்று கேட்டார்.
 
அதற்கு ஆர்யா, சென்னை 600028-2 போல விரைவில் தொடங்கலாம் என்று பதில் டுவிட் செய்துள்ளார். அப்போ ராஜா ராணி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ராஜா ராணி இரண்டாம் பாகம் உருவானால் அதை யார் இயக்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லி தற்போது முன்னணி நடிகர்களோடு பிசியாக இருப்பதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :