1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (14:14 IST)

உலக ரசிகர்களைக் கவர்ந்திழுப்பாரா தனுஷ்? 17 மொழிகளில் ஜகமே தந்திரம்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். 
 
தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த படம்  190 நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (காஸ்ட்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேசியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. 
 
கடந்த மே மதமே வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா பெருந்தொற்றினால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. தியேட்டர்களில் வெளியாகவில்லை என்றாலும் 17 மொழிகளில் ஜகமே தந்திரம் வெளியாகப்போவதை கேட்டு தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கொரோனா ஊரடங்கில் ஓடிடி தளத்தில் பல மொழி படங்களை பார்ப்பதில் ஆர்வம் செலுத்தும் உலக சினிமா பிரியர்களை தனுஷ் ஜகமே தந்திரம் மூலம் கவருவரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!