வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (17:27 IST)

கழுத்தில் தாலியுடன் மணக்கோலத்தில் சாக்ஷி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கழுத்தில் தாலியுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ஒரு நிமிடம் ஷாக் கொடுத்துவிட்டார். 

பின்னர் அவரது கேப்ஷன் படித்த பிறகு தான் தெரிந்தது அது விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் என்று. இதுல எம்புட்டு அழகா இருக்கீங்க இத விட்டுவிட்டு கன்றாவி கவர்ச்சி காட்டிட்டு கிடக்குறியே என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.