திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 26 மே 2018 (08:08 IST)

“சூர்யா சார் படத்தில் பணிபுரிவது சந்தோஷமாக இருக்கிறது” – எடிட்டர் பிரவீன் கே.எல்.

‘சூர்யா சார் படத்தில் பணிபுரிவது சந்தோஷமாக இருக்கிறது’ என எடிட்டர் பிரவீன் கே.எல். தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது. வருகிற தீபாவளி விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.
 
ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் சூர்யா ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், ஜெகபதி பாபு, ராம்குமார், இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் எடிட்டராக ஜி.கே.பிரசன்னா கமிட்டாகியிருந்தார். இந்நிலையில், திடீரென அவருக்குப் பதிலாக பிரவீன் கே.எல். எடிட்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
“சூர்யா சார் மற்றும் செல்வராகவன் சாரின் ‘என்.ஜி.கே.’ படத்தில் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. செல்வா சாரின் எழுத்துகளும் படங்களும் ரொம்பப் பிடிக்கும். யுவன் மற்றும் செல்வா சாரின் மேஜிக்கல் காம்போவில் பணியாற்றுவது சந்தோஷம்” எனத் தெரிவித்துள்ளார் பிரவீன் கே.எல்.