வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (20:30 IST)

பிரபல நடிகை வீட்டில் வருமான வரி ரெய்டு – திரையுலகில் பரபரப்பு !

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை ரெய்டு நடந்துள்ளது.

கர்நாடகாவை சொந்த ஊராகக் கொண்ட  பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டாவுடன் நடித்த  கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களால் தென் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இப்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று கர்நாடகாவில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. ரெய்டின் போது ராஷ்மிகா வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகாவின் தந்தை மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பதால் அவர் வரி ஏய்ப்பு ஏதேனும் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரெய்டு குறித்த மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.