வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (14:22 IST)

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ராஷ்மிகா! – வருமான வரித்துறை ரெய்டு!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளில் திடீர் ரெய்டு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் பிரபலமானார். தொடர்ந்து டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தவர், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் ”சரிலேரு நீக்கெவரு” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது சம்பளத்திற்கு அவர் சரியாக வருமானவரி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.