புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (15:18 IST)

‘இஷ்க்’ ரீமேக்கில் நடிக்கும் ‘பிகில்’ நடிகர்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘இஷ்க்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிகில் படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘இஷ்க்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ‘பிகில்’ படத்தில் விஜய்யின் நண்பராக நடித்த கதிர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறபடுகிறது