1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:37 IST)

பிரச்சனைய முடிச்சிட்டு வாங்க… சிம்புவை கைவிட்ட ஐசரி கணேஷ்!

சிம்பு மேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பிரச்சனைகள் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கலாம் என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளாராம்.

சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கிரித்தி சனோன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் திருச்செந் நடக்க இருந்த நிலையில் சிம்பு நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு தர வேண்டிய பணத்தை தரவேண்டும் எனவும் அதைத் தரும் வரையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த பிரச்சனையில் ஈடுபடாத தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரச்சனையை சிம்புவையே முடித்துக் கொள்ள சொல்லிவிட்டாராம். மேலும் பிரச்சனை முடிந்த பின்னர் படப்பிடிப்பைத் தொடங்கிக் கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம்.