சிம்பு மேல் அடுக்கடுக்கான புகார்… கவுன்சிலில் குவியும் தயாரிப்பாளர்!
நடிகர் சிம்பு மேல் இப்போது பல தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அடுக்கடுக்காகப் புகார்களை கொடுத்துள்ளனராம்.
சிம்புவின் நதிகளில் நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு இப்போது சிம்புவின் முன்னாள் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அவர் மேல் மேலும் சிலரும் புகாரை அளிக்க ஆரம்பித்துள்ளனரனாம்.
இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தன்னுடைய வேட்டை படத்தில் நடிக்க வைக்க ஒரு கோடி ரூபாய் முன் தொகைக் கொடுத்துள்ளார். சிம்பு அந்த படத்தில் நடிக்காததால் அந்த தொகையைக் கேட்டு புகார் அளிக்க, அதே போல இது நம்ம ஆளு படத்தை விநியோகம் செய்த விதத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியும் மற்றொரு புகாரை அளித்துள்ளாராம்.