வாரிசு கதை பற்றி மாற்றி மாற்றி பேசும் தில் ராஜு & வம்சி!
வாரிசு திரைப்படம் தமிழ்- தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகி ரிலீஸுக்கு தயார் ஆகி வருகிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் சிம்பு குரலில் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த பாடலில் பாடியது மட்டும் இல்லாமல் சிம்பு நடித்தும் இருந்தார்.
இந்த படம் தமிழ் படமாக இருந்தாலும், நிறைய தெலுங்கு மொழி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த கதையை விஜய்க்குதான் முதன் முதலில் சொல்லி சம்மதம் பெற்றதாக வம்சி ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இந்த கதையை மகேஷ் பாபு மற்றும் ராம் சரண் ஆகியோரை வைத்து எடுக்க முயன்று இரண்டுமே நடக்காததால் விஜய்யிடம் சொல்லி எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இருவரும் இப்படி மாற்றி மாற்றி பேசுவதால் விஜய் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.