புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:56 IST)

பொன்னியின் செல்வன் போஸ்டரால் வந்த குழப்பம் – உடைகிறதா 25 வருட கூட்டணி !

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டரில் வைரமுத்துவின் பெயர் இடம்பெறாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வனின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதில் படத்தில் பணிபுரியும் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் அனைத்தும் இடம்பெற்று இருந்தன. ஆனால் பாடலாசிரியர் என்ற இடத்தில் எந்த பெயரும் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. வழக்கமாக மணிரத்னம் படத்தில் வைரமுத்துதான் பாடல்கள் எழுதுவார். இந்த கூட்டணி 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக தமிழ் சினிமா ரசிகர்களின் இசைப்பசிக்கு தீனி போட்டு வருகிறது. ஆனால் மீ டூ பிரச்சனையில் வைரமுத்து சிக்கியதால் அவரோடு இணைந்து பணியாற்ற ரஹ்மான் விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் வேறு பாடலாசிரியர் பெயரும் போஸ்டரில் இல்லாததால் படத்தில் பாடல்களே இல்லையோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.