சிலிண்டர் விநியோகிக்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா ?? நீதிமன்றம் கேள்வி

sylinder
Sinoj| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (15:19 IST)
சிலிண்டர் விநியோகத்தின்போது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் எத்தனை என்று ஜனவரி 8 ஆம்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, சிலிண்டர் சப்ளை செய்பவர் வீட்டுக்காரர்களிடம் கமிசன் பெருவது பெரும்பாலான இடங்களில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேட்கும் விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் தங்களையும் இணைக்க கோர தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தது.

இவ்வழக்கில் இண்டேன் நிறுவனம் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


ஹெச்.பி.BPCl நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்தன.

பின்னர் சிலிண்டர் போடுபவர் கமிஷன் பெற்றால் டீலர் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில்,இன்று சென்னை உயர் நீதிமன்றம் சிலிண்டர் விநியோகத்தின்போது கூடுதல் கட்டணம் வசூக்கப்படுகிறதா என திடீர் சோதனை நடத்த வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :